காந்தி நினைவிடத்தில் தியானம் செய்துவிட்டு சிபிஐ-யிடம் ஆஜரான துணை முதல்வர்
- புதிய மதுபான கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில், டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார்.
- டெல்லியில் அமல்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கையில், அம்மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மீது ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
- இதை ஆம் ஆத்மியும், மணிஷ் சிசோடியாவும் கடுமையாக மறுத்து வரும் நிலையில், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
- மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தினர்.
- இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியதால், மணிஷ் சிசோடியா சிபிஐ அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
- முன்னதாக மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்று தியானம் செய்த அவர், தந்து ஆதரவாளார்களுடன் போராட்டத்திலும் ஈடுபட்டார்.
Next Story