மணிப்பூரில் வன்முறையாக வெடித்த பேரணி..போலீசார் மீது கல்வீசி தாக்கியதால் பரபரப்பு - 144 தடை உத்தரவு

x
  • மணிப்பூரில் அரசை கண்டித்து நடைபெற்ற பேரணியின் போது வன்முறை வெடித்தது.
  • மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தில் வனத்துறையினரின் நடவடிக்கையால் பழங்குடியின மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி
  • மாநில அரசை கண்டித்து பேரணி நடைபெற்றது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்ற போது பேரணியில் சென்றவர்கள் கல்வீசி தாக்கியதால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். அப்போது ஏற்பட்ட பயங்கர வன்முறையில் போலீசார் உள்பட 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள்
  • இம்பாலில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தையடுத்து காங்போக்பி மாவட்டத்தில் வரும் 9 ந்தேதி வரை
  • 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பேரணி நடைபெற இருந்த மேலும்
  • சில மலை கிராம பகுதிகளிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், வன்முறை குறித்து ஆளுநருக்கு அறிக்கை அனுப்ப்படும்
  • என்றும் காங்போக்பி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்