மணிப்பூர் வீடியோ விவகாரம்... குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை - தமிழிசை சௌந்தரராஜன்
மணிப்பூர் வீடியோ விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அது பேச முடியாத அளவிற்கு வருத்தமான நிகழ்வு என கூறியுள்ளார். புதுச்சேரி குறிஞ்சி நகர் பகுதியில் புணரமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை, துணைநிலை ஆளுநர் தமிழிசை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், மருத்துவ படிப்பில் புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு, இந்தாண்டே கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். மணிப்பூர் வீடியோ விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், அது பேச முடியாத அளவுக்கு வருத்தமான நிகழ்வு என கூறியதோடு, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Next Story