பேட்டில் மாயாஜாலம் காட்டிய மந்தனா.. இங்கிலாந்தை கிறங்கடித்த இந்திய புயல்

x

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்தின் ஹோவ் நகரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை எடுத்த‌து.

பின்னர் பேட்டிங்க் செய்த இந்திய அணி, 44 புள்ளி இரண்டாவது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 232 ரன்களை குவித்த‌து. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. 91 ரன்களை குவித்த ஸ்மிரிதி மந்தனா ஆட்ட நாயகி விருதை பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்