மனதின் குரல் 100-வது பகுதி..பிரதமருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

x

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் 100 - வது நிகழ்ச்சியின் தமிழ் திரையிடல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளையராஜா, ரஜினிகாந்த், ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. ஆனால் திரைப்பட நடிகைகள் அர்ச்சனா, லட்சுமி ராமகிருஷ்ணன் திரைப்பட பாடகர் தீனா, கொரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள், திருநங்கைகள், முன்னாள் ராணுவ வீரர்கள், வீராங்கனைகள், இளைஞர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், கலந்து கொண்டனர். மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களை குறிப்பிட்டு பேசிய நபர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விருது வழங்கி கௌரவித்தார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, இன்று எது செய்தாலும் அரசியலாகிறது என்றும், அறியப்படாத மக்களின் மக்கத்துவமான பல செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடி பேசியதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்