'பெவிகுயிக்' பசையை வைத்து தம்பியை தீர்த்து கட்டிய அண்ணன் - மயிலாடுதுறையில் வினோத கொலை
மயிலாடுதுறை அருகே, மதுவில் சயனைடு கலந்து கொடுத்து தம்பியைத் தீர்த்துக் கட்டிய சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர். குத்தாலம் வட்டம் தத்தங்குடி பகுதியில் கொல்லுப்பட்டறை நடத்திவந்த பழனிகுருநாதன் என்பவரும், அவரிடம் வேலை பார்த்துவந்த பூராசாமி என்பவரும் மர்மமான முறையில் உயிரிழந்தனர். தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், சொத்துத் தகராறில் பழனிகுருநாதனின் சகோதரர் பாஸ்கரன் மதுவில் சயனைடு கலந்து அதை பெவிகுயிக் போட்டு ஒட்டி பட்டறையில் வைத்துவிட்டு வந்தது அம்பலமானது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story