வீட்டு முகவரி மாறி கதவை தட்டியதால் சிறுவனை சுட்டுத்தள்ளிய நபர் - தம்பிகளை அழைக்க சென்றபோது பயங்கரம்..!
அமெரிக்காவின் மிசெளரி மாகாணத்தில், 16 வயது கறுப்பின சிறுவன் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மிசெளரி பகுதியில், 115 வது குடியிருப்பில் உள்ள தமது இரட்டை சகோதரர்களை அழைத்து வருவதற்காக, ரால்ஃப் யார்ல் என்ற 16 வயது கறுப்பின சிறுவன், சென்றுள்ளார். ஆனால், 115 வது குடியிருப்புக்கு பதிலாக, 115 வது தெருவில் உள்ள குடியிருப்புக் சென்று, அங்குள்ள வீட்டின் கதவை தவறுதலாக தட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த வீட்டு உரிமையாளர் சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். தலை மற்றும் கைகளில் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இது நிறவெறி தாக்குதல் என கூறி, சிறுவனின் உறவினர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, வீட்டு உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story