மாட்டு கொட்டகைக்குள் துண்டு துண்டாக கிடந்த நபர் - திருப்பத்தூரில் அரங்கேறிய கொடூரம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பர் அருகே, பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கீழ்மிட்டாளம் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாரஷ் என்பவர், மாட்டு கொட்டகைக்கு சென்ற போது, சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையறிந்த ஜெயபிரகாஷின் உறவினர்கள், கொலையாளிகளை கண்டறியும் வரை உடலை ஒப்படைக்க மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உடலை கைப்பற்றினர். இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சீட்டு பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பெரியவரிகம் பகுதியை சேர்ந்த உறவினர்கள் ராஜ்குமார், மாணிக்கம் ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது. தொடந்து, இருவரையும் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.
Next Story