பெண் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நபர் - 7வருடங்களுக்கு பிறகு திடுக் திருப்பம்

x

உத்திரபிரதேச மாநிலத்தில் 7 வருடங்களாக சிறையில் இருக்கும் தன் மகனை மீட்க தாய் மேற்கொண்டு வந்த முயற்சியில் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு திருப்பம் ஏற்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் அலிகரில் கடந்த 2015 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், மாணவியின் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரை போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில், சிறையில் அடைக்கப்பட்ட நபரின் தாய், தன் மகன் குற்றவாளி அல்ல என்பதை நிருபிக்க காணாமல் போன மாணவியை அவரின் புகைப்படம் மூலம் தேட ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், ஏழு வருடங்கள் கழித்து உத்திரபிரதேசத்தில் உள்ள ஹத்ராஸில் அந்த மாணவி திருமணமாகி 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதாக கூறி போலீசில் தெரிவித்த்திருக்கிறார். இதையடுத்து, ஹத்ராஸ் சென்ற போலீசார், அந்த பெண்ணை விசாரணைக்காக அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், நீதிமன்ற அனுமதியை பெற்ற பிறகு அந்த பெண்ணிடம் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ள உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்