"ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணு அதுவும் போச்சா.." மொத்தமாக காங்.ஸின் சோலியை முடித்த மம்தா..!

x

மேற்கு வங்க சட்டப்பேரவையில் இருந்த காங்கிரஸ் கட்சியின் ஒரே எம்எல்ஏவான பெரான் பிஸ்வாஸ் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இதனையடுத்து, மேற்கு வங்க சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கை மீண்டும் பூஜ்யமானது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பேனர்ஜி முன்னிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ பெரான் பிஸ்வாஸ் இணைந்துள்ளார். கடந்த 2021 - ம் ஆண்டு நடந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்