மாமல்லபுரம் கடற்கரையில் குளிக்க சென்றபோது.... புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம்

x

மாமல்லபுரம் கடலில் குளிக்கும் போது, ராட்சத அலை இழுத்து சென்று புது மாப்பிள்ளை உயிரிழந்தார். காஞ்சிபுரத்தை சேர்ந்த பாபு என்பவர், குடும்பத்துடன் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா சென்றார். கடலில் குளித்த போது, எதிர்பாராத விதமாக ராட்சத அலை இழுத்து சென்று பாபு உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், மீனவர்கள் உதவியுடன் பாபுவின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான ஒரு மாதத்திலேயே, கடல் அலையில் சிக்கி பாபு உயிரிழந்தது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்