"நாளைய இந்தியாவை ஆளப்போவது யார்? இந்த 'இந்தியன்' தான்" கோவையில் மக்கள் நீதி மய்யத்தினர் போஸ்டர்
"ஆரம்பிச்சிட்டோம்ள! நாளைய இந்தியாவை ஆளப்போவது யார்? இந்த 'இந்தியன்' தான்"
நாளைய இந்தியாவை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிப்பது இந்த இந்தியன் தான் என்ற வசனத்துடன் கோயம்புத்தூரில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
கோவையில், மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் இன்றைய தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் விதமாக பல்வேறு கட்சியினரும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பாக தேர்தல் பணிகள் தொடங்கவுள்ளதை குறிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
Next Story