"ரஷ்ய படைகளிடம் இருந்து மாபெரும் நிலப்பரப்பு மீட்பு?" - ஜெலென்ஸ்கி அறிவிப்பு

x

கிழக்கு உக்ரைனில் சுமார் 2 ஆயிரம் சதுர கிலோமீட்டருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பை ரஷ்ய படைகளிடம் இருந்து விடுவித்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒட்டுமொத்தமாக கிழக்கு உக்ரைனில் இருந்து 2 ஆயிரத்து 434 சதுர கிலோ மீட்டர் நிலம் மற்றும் 96 குடியிருப்புகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரத்தில் மட்டும், உக்ரைனிய படைகள் நாட்டின் கிழக்கில் இருந்து 776 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு மற்றும் 29 குடியிருப்புகளை கைப்பற்றியதாகவும், தெற்கில் இருந்து 500 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்