நீர் மறைந்தாலும், நின் புகழ் மறைவதில்லை!! தமிழ் திரைப்பட உலகில் முத்திரை பதித்த மேஜர் சுந்தர்ராஜன் காலமான தினம், இன்று
- தேனி மாவட்டம், பெரியகுளத்தில் 1935ல் பிறந்த சுந்தர்ராஜன், இளம் வயதிலேயே நாடகங்களில் ஈடுபாடு கொண்டிருந்தார். பள்ளியில் படிக்கும் போது, ஏராளமான நாடகங்களில் நடித்தார். இளங்கலை பட்டம் பெற்ற, பின் சென்னையில் தொலைபேசி துறையில் சேர்ந்தார்.
- தொலைபேசி ஆய்வாளராக பணியாற்றியபடி, பல்வேறு சபா நாடங்களில் நடித்தார். கே.பாலச்சந்தரின் நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.
- 1962ல் பட்டினத்தார் படத்தின் மூலம் திரைபடத் துறையில் அறிமுகமானார்.
- பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த மேஜர் சந்திரகாந்த் திரைப் படத்தில் கண் பார்வையற்ற, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி மேஜா் சந்திரகாந்த் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு இவரின் பெயருக்கு முன்பு மேஜர் என்ற பெயர் சேர்ந்து கொண்டது.
- சிவாஜி கணேசனுடன் அவர் நடித்த உயர்ந்த மனிதன் படத்தில், இந்த பாடல் பெரும் ஹிட்டானது.
- 900க்கும் மேற்பட்ட திரைபடங்களில் பல்வேறு குணச்சித்தர வேடங்களில் நடித்துளார் மேஜர் சுந்தர்ராஜன். சிவாஜி, எம்.ஜி.ஆர் உடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார், தனது தனித்துவமான நடிப்பின் மூலம் திரைத்துறையில் தனி இடம் பிடித்தார்.
- காங்கிரஸ் சார்பாளராக இருந்த மேஜர் சுந்தர்ராஜன், பின்னர் சிவாஜி கணேசன் தொடங்கிய தமிழக முன்னேற்ற முன்னணியில் இணைந்தார். பின்னர் சிவாஜியுடன் ஜனதா தளத்தில் இணைந்தார்.
- தொலைகாட்சி தொடர்களிலும் நடித்த மேஜர் சுந்தர்ராஜன், 2003ல் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
- தமிழ் திரைப்பட உலகில் முத்திரை பதித்த மேஜர் சுந்தர்ராஜன் காலமான தினம், 2003 பிப்ரவரி 28.
Next Story