தனி விமானத்தில் 'ஜாலி ட்ரிப்'... ஷிண்டேவை ஆதரித்ததால் அடித்த ஜாக்பாட்!...

சிவசேனா தலைமையிலான அரசு தப்புமா? கவிழுமா? என்ற கேள்வி ஒட்டுமொத்த மகாராஷ்டிராவிலும் அனல் பறக்கும் நிலையில், தனி விமானம், சொகுசு ஓட்டல், ஜாலி பயணம் என அதகளப்படுகிறது ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்கள். தரப்பு. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்ப்போம்...
x

சிவசேனா தலைமையிலான அரசு தப்புமா? கவிழுமா? என்ற கேள்வி ஒட்டுமொத்த மகாராஷ்டிராவிலும் அனல் பறக்கும் நிலையில், தனி விமானம், சொகுசு ஓட்டல், ஜாலி பயணம் என அதகளப்படுகிறது ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்கள். தரப்பு. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்ப்போம்...


கட்சி தொடங்கிய 56 ஆண்டுகளில் சந்தித்திராத மிக பெரிய உட்கட்சி பூசலை சந்தித்துள்ளது, மகாராஷ்டிராவின் சிவசேனா. அக்கட்சியின் நகர்ப்புற அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சொந்த கட்சிக்கு எதிராக திரும்பியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏக்நாத் ஷிண்டே பக்கம் முப்பதுக்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை தக்க வைக்க ஏக்நாத் ஷிண்டே காட்டும் முனைப்பு கூவத்தூர் ரகம்...தனி விமானம்...சொகுசு ஓட்டல்...ஜாலி டிரிப் எம்.எல்.ஏ.க்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்கிறார்கள்.

முதலில் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள லீ மெரிடியன் என்ற நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டி ருந்தனர், சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள். பிறகு அங்கிருந்து கடந்த புதன் கிழமை அன்று கவுகாத்தி விரைந்தனர். இதற்காக வணிக ரீதியிலான பெரிய மற்றும் சிறிய விமானங்கள் இரண்டு வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. இதற்காக ஆன செலவு மட்டும் சுமார் 85 முதல் 90 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. கவுகாத்தி சென்றதும், அங்குள்ள ரேடிசன் ப்ளூ என்ற நட்சத்திர ஹோட்டலில் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டனர். 196 அறைகள் கொண்ட அந்த ஹோட்டலில் 70 அறைகள் ஷிண்டே முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த அறையில் தங்குவதற்கு நாள் ஒன்றுக்கு 8 லட்ச ரூபாய் வாடகை என்று கூறப்படுகிறது. அந்த வகையில் 7 நாட்களுக்கு தங்கும் அறைக்கு மட்டும் 56 லட்ச ரூபாய் செலவு செய்யப்படுகிறது. சாப்பாடு மற்றும் இதர செலவுகளுக்கு நாள் ஒன்றுக்கு 8 லட்ச ரூபாய் வரை செலவு செய்யப்படுவதாகவும், ஏழு நாட்களை கணக்கில் எடுத்து கொண்டால் ஒரு கோடியே 12 லட்ச ரூபாய் செலவழிக்கப்படுவதும் தெரியவந்துள்ளது.

அந்த ஹோட்டல் நிர்வாகம் தற்போது முன்பதிவை தங்கும் அறை மற்றும் விருந்து மண்டபத்தின் முன்பதிவை நிறுத்திவிட்டதாகவும், அங்குள்ள உணவகத்தில் வெளியாட்களை அனுமதிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

நொடிக்கு நொடி அதிரடி என உச்சகட்ட அரசியல் குழப்பத்தில் மகாராஷ்டிரா தவித்துக்கொண்டிருக்க, சகல செள்கரியங்களுடன் உற்சாகமாய் இருக்கிறார்கள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்


Next Story

மேலும் செய்திகள்