மகாளய அமாவாசை - திதி கொடுத்து வழிபாடு - புனித நீர்நிலைகளில் நீராடி பிரார்த்தனை
மகாளய அமாவாசையையொட்டி தமிழகம் முழுவதுமுள்ள புனித நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.
மகாளய அமாவாசையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் ஏராளமானோர் திதி கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
குற்றாலம் மெயின் அருவி கரையில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
பின்னர் அருவியில் நீராடி பிரார்த்தனையை நிறைவு செய்தனர்.
கடலூர் சில்வர் பீச் மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த அவர்கள் பின்னர் நீர் நிலைகளில் நீராடினர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
பூஜை செய்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டு பின்னர் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர்.