உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தி வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர் சாதனை

x
  • செஸ் போட்டியில் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சனை, சென்னை அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி வீழ்த்தி பெருமை சேர்த்துள்ளார்.
  • '' டைட்டில் டியூஸ்டே 2023 '' என்ற பெயரில் சர்வதேச செஸ் சம்மேளனம் போட்டி இணைய தளம் வாயிலாக நடத்தப்படுகிறது.
  • இதில் சென்னை அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவர் பிரணவ் வெங்கடேஷ், நார்வேவை சேர்ந்த உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார்.
  • போட்டி முடிவில் அமெரிக்காவின் ஹிகாரு நகாம், ஈரானை சேர்ந்த அலிரேசா பிரோஸ், இந்தியாவின் பிரணவ் ஆகியோர் தலா 9 புள்ளி 5 புள்ளிகளை சேர்த்திருந்தனர்.
  • டைபிரேக்கர் புள்ளிகள் அடிப்படையில் பிரணவ் மூன்றாம் இடத்தை பிடித்து 50 ஆயிரம் ரூபாய் பரிசை தட்டிச் சென்றார்.
  • இதையடுத்து பள்ளி தாளாளர் எம். வேல்மோகன், கடந்த 6 மாதத்திற்குள் வேலம்மாள் பள்ளிக் குழுமத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் உலக சாம்பியன் கார்ல்சனை தோற்கடித்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்