காவல் துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை போட்ட உத்தரவு

x

திருச்சி, புதுக்கோட்டை, உள்ளிட்ட உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கு உட்பட்ட மாவட்டங்களில் ஆடல், பாடல், கபடி உள்ளிட்ட கலாசார நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கி கோரி தனி , தனியாக மனு தாக்கல் செய்து இருந்தனர்.இந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி T.ராஜா மற்றும் நீதிபதி விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் திருவிழாக்களின் போது கிராம மக்கள் சார்பாக நடைபெறும் மஞ்சு விரட்டு, கபடி, ஆடல் , பாடல் உள்ளிட்ட கலாசார நிகழ்வுகள் நடத்த கிராம மக்கள் அனுமதி கோரினால் தாமதிக்காமல் அனுமதி வழங்கிட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்காக கிராம மக்களை அலைய விடக் கூடாது என காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்