பள்ளி வாகனங்களுக்கு கட்டண நிர்பந்தம்... தேர்வுக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதி
சுங்கச்சாவடியில் உள்ளூர் பள்ளி வாகனங்களிடம் கட்டணம் கேட்டு தகராறு ஏற்பட்டதில், தேர்வுக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதி அடைந்தனர். மதுரை மாவட்டம், கப்பலூர் சுங்கச் சாவடியில் ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர் ஒட்டாததால் உள்ளூர் பள்ளி வாகனங்கள் செல்ல அனுமதிக்க முடியாது என சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால், தேர்வுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். இதைத்தொடர்ந்து, பள்ளி வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக டிஎஸ்பி வசந்தகுமார், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய நிலையில், போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story