வாடிக்கையாளருக்கு தெரியாமல் நகைகளை ஏலத்தில் விட்ட தனியார் நிதி நிறுவனம் - கூடுதலாக 50 சவரன் நகை வழங்க கோர்ட் உத்தரவு
- மதுரை திருநகரை சேர்ந்த சியாமளா ரவி என்பவர், ஐ ஐ எஃப் எல் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் தமது 50 பவுன் நகைகளை வைத்து, 28 லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
- இந்நிலையில் நகையை மீட்க சென்ற போது நகைகளை ஏலம் விட்டதாக நிதி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
- இதனால் அதிர்ச்சி அடைந்த சியாமளா ரவி, மதுரை நுகர்வோர் ஆணைய நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
- இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணைய நீதிமன்ற நீதிபதி பாரி மற்றும் ஆணைய உறுப்பினர்கள் விமலா, வேலுமணி அமர்வு சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் அவருக்கு தரவேண்டிய 50 பவுன் நகையையும் அதற்கு ஈடாக கூடுதலாக 50 பவுன் நகையையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
- மேலும், வாடிக்கையாளர் மன உளைச்சலுக்கு ஆளானதால் ஐம்பதாயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் மேலும் அவர் திருப்பிய நகைக்கான 9 சதவீத வட்டியை மட்டும் எடுத்துக்கொண்டு மீத தொகையையும் திரும்ப வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
Next Story