மெட்ரோக்கு தயாராகும் மதுரை... மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி சுரங்கம் ...களம் இறங்கிய ஸ்பெஷல் டீம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுச்சுவரிலிருந்து, 115 மீட்டர் தொலைவில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளதாக, சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள், தீவிரமடைந்துள்ளது. இதனையொட்டி மதுரையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையவுள்ள இடங்களையும், மெட்ரோ பணிமனை அமையவுள்ள தோப்பூரில் நடைபெறும் சீரமைப்பு பணிகளையும், தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். மெட்ரோ திட்டத்திற்கான போக்குவரத்து ஒருங்கிணைப்பு பணிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ் சந்த் மீனா, கோயில்களின் சுற்றுச்சுவரிலிருந்து 100 மீட்டருக்கு அப்பால், மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்படி மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுச்சுவரிலிருந்து ,115 மீட்டர் தொலைவில் சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.