கல்லூரி வாசலில் இளைஞர்கள் ரகளை..மாணவியின் தந்தைக்கு அடி,உதை-அலறியடித்து கல்லூரிக்குள் ஓடிய மாணவிகள்

x

மதுரையில் மதுபோதையில் அரசு மகளிர் கல்லூரி வாசலில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை, தட்டிக்கேட்ட மாணவியின் தந்தையை அவர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அமரர் ஊர்தி முன்பாக இளைஞர்கள் சிலர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மகளிர் கல்லூரி முன்பு அவர்கள் கூச்சலிட்டபடி செல்ல, அங்கு நின்றிருந்த மாணவியின் தந்தை ஒருவர் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அந்த கும்பல், அவரை தாக்கியுள்ளது. இதனால் கல்லூரி மாணவிகள் பயந்து கல்லூரிக்குள் ஓடிய நிலையில், இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்