சாலையில் சுற்றி திரிந்த கால்நடைகள் - அதிரடியாக பறிமுதல் செய்த அதிகாரிகள்...
மதுரையில் வைகை கரையோர சாலையில் சுற்றி திரிந்த கால்நடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்த நிலையில், உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிவதால் விபத்துக்கள் ஏற்படுவதாக புகார்கள் வந்த நிலையில், மதுரை வைகை கரையோர சாலை பகுதியை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது, சாலையில் கட்டப்பட்டிருந்த கால்நடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்த நிலையில், உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story