தங்க பல்லக்கில் மதுரைக்குள் நுழைந்த கள்ளழகர் - சர்க்கரை தீபம் ஏந்தி வரவேற்ற பெண்கள்

x

மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் மதுரை மாநகருக்குள் வந்த கள்ளழகருக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்...மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 1ஆம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று மாலை சுந்தராஜபெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக தங்கப்பல்லக்கில் அழகர்மலையிலிருந்து மதுரையை நோக்கி புறப்பாடாகினார். இன்று அதிகாலையில் மூன்றுமாவடி பகுதிக்கு கண்டாங்கி பட்டுடுத்தி தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகருக்கு பிரமாண்டமாக எதிர்சேவை நடைபெற்றது. பக்தர்கள் கருப்பசாமி வேடமிட்டு ஆடல்பாடலுடன் வரவேற்றனர். பெண்கள் கையில் சர்க்கரை தீபம் ஏந்தியபடி வரவேற்பளித்தனர். மாநகர் பகுதிக்குள் நுழைந்த கள்ளழகருக்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பளிக்கப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்