தாலி கட்டப்போன மாப்பிள்ளை..பாய்ந்து வந்து தட்டிவிட்ட கர்ப்பிணி -ரகசியத்தை உடைத்ததால் ஷாக்கான மண்டபம்

x

காதலித்த தன்னை கர்ப்பிணியாக்கி விட்டு பின்னர் வேறொரு திருமணத்திற்கு தயாராக இருந்த காதலனின் திருமணத்தை பெண் தடுத்து நிறுத்திய சம்பவம் மதுரையில் நடந்திருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டை சேர்ந்தவர் நாகபிரியா.

இவர் தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவருக்கும் உறவினர் சின்னசாமி என்பவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இவர்கள் வீட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதில், நாகபிரியா கர்ப்பமாகியுள்ளார்.

இந்நிலையில், சின்னசாமியின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாட்டை ஆரம்பித்துள்ளனர்.

இதை சின்னசாமி நாகபிரியாவிடம் தெரிவிக்காமல் மறைத்ததோடு அடுத்த திருமணத்திற்கு தயாராகி உள்ளார்.

இதனை அறிந்த நாகபிரியா, திருமண மண்படத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து, சின்னசாமியின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்