"வாரம் 2 நாட்கள் மட்டும் எங்க பல்கலை.-க்கு வந்து பாடம் நடத்துங்க" - அமைச்சர் பிடிஆருக்கு அழைப்பு

x

சென்னை பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த முன்வருமாறு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.

அதில் பேசிய பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை, நிர்வாக மேலாண்மை படிக்கும் மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்களாவது வகுப்புகள் எடுக்க அமைச்சர் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

நிதி நிர்வாகத்திலும், மேலாண்மையிலும் அமைச்சர் பெற்றுள்ள அனுபவங்கள், மாணவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்