மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு.. போலீசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி மாணவி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய காவல்துறை தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் 3 மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற் கூராய்வு நடத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என மாணவியின் தந்தை தரப்பு கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மாணவியின் மறு உடற்கூறாய்வு முடிந்தும் சடலத்தை வாங்க பெற்றோர் மறுத்து விட்டனர். இந்த சூழலில் மாணவியின் தந்தை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் சடலத்தை வாங்க பெற்றோருக்கு உத்தரவிடும்படி அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர், நீதிபதி சதீஷ்குமார் முன்பாக முறையீடு செய்தார். அதேபோல் மாணவியின் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யப் போவதில்லை எனத் தெரிவித்த நீதிபதி, உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை இன்று வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்