தமிழக அரசு 120 கோடி ரூபாய் நிதி.. மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்தம் பணி தொடங்கியது
மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்த தண்ணீர் வெளியேற்றும் பணி தொடங்கியது. மதுராந்தகம் ஏரியை தூர்வாரவும், ஏரிக்கரையை மேம்படுத்தவும், உபரி நீர் மதகுகளை பழுது பார்க்கவும் தமிழக அரசு 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருந்தது. இந்நிலையில் பொதுப்பணித் துறையினர் உபரி நீர் வெளியாகும் கரையினை பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏரியில் இருந்து தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்ட பின்னர், ஏரியை நான்கு பிரிவுகளாக பிரித்து தூர்வாரும் பணியை பொதுப்பணித் துறையினர் மேற்கொள்ள உள்ளனர்.
Next Story