மனைவியுடன் சேர்த்து வைக்காத விசிக நிர்வாகியை கொடூரமாக கொன்ற மச்சான்.. சென்னையில் பயங்கரம்

x

எண்ணூர் அருகே சின்ன எர்ணாவூர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியான இவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த தனசேகரனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தனசேகருடைய தங்கையின் கணவர் சீனிவாசனை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், சீனிவாசனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்ததாகவும், தங்களை சேர்த்து வைக்க தனசேகரன் மறுத்ததால் அவரை கொலை செய்தேன் என அளித்த வாக்குமூலத்தால் அதிர்ச்சியடைந்த போலீசார், சீனிவாசனை சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்