தமிழகத்தில் நாளை முழு சந்திர கிரகணம்

x

தமிழகத்தில் நாளை முழு சந்திர கிரகணம்

மாலை நேரத்தில் பொதுமக்கள் பார்க்கலாம் என தகவல்...

இந்தியாவில் சந்திர கிரகணம் நாளை மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.29 மணி வரை நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியன், பூமி மற்றும் சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும் போது, பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

இந்தியாவில் முழு சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளது.

இந்திய நேரப்படி மதியம் 2.39 மணிக்கு கிரகணம் தொடங்கும். முழு கிரகணம் 3.46 மணிக்கு ஏற்பட்டு, மாலை 6.29 மணி வரை கிரகணம் நிகழும்.

சந்திரன் உதயமாகும் முன்பே கிரகணம் நடந்து கொண்டிருக்கும் என்பதால், இந்தியாவின் அனைத்து இடங்களிலும் முழு சந்திர கிரகணத்தை பார்க்க முடியாது.

தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளில் தென்படும்.

இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணம் 2023ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்