புதுவை பெண்களுக்கு அடித்த லக்கு.. - இனி வெள்ளிக்கிழமைகளில்...
புதுச்சேரி அரசுத்துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேர வேலை சலுகை இன்று முதல் அமலுக்கு வந்தது.
புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் வழக்கமான வெள்ளிக்கிழமை பூஜைகள் மேற்கொள்ள வசதியாக மாதத்தில் 3 வெள்ளிக் கிழமைகள் மட்டும் காலை 8.45 மணி முதல் 10.45 மணி வரை 2 மணி நேரம் சிறப்பு அனுமதி அளிக்கப்படும் என்று அம்மாநில துணைநிலை தமிழிசை சவுந்தரராஜன் கடந்த மாதம் அறிவித்தார். இதைத் தொடர்ந்து அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. பெண்கள் மட்டுமே பணிபுரியும் இடங்களில் இந்த அனுமதியை சுழற்சி முறையில் வழங்கலாம் என்றும் மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற நேரடி பொதுமக்கள் சேவை, அத்தியாவசியப் பணிகளில் உள்ள பெண்களுக்கு இந்த சிறப்பு அனுமதி பொருந்தாது என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு அனுமதி தொடர்பாக அரசியல் கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்துள்ளன. இருந்த போதிலும் அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் அரசு பெண் ஊழியர்களுக்கான இந்த சிறப்பு அனுமதியானது இன்று முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.