குறைந்த கட்டணம் - குளுகுளு பயணம்.. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் - மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு

x

ஏ.சி சேர் கார் இருக்கைகளுக்கான கட்டணங்களை 25 சதவீதம் வரை குறைக்க இந்திய ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

2022-23ல் இந்திய ரயில்வேயின் மொத்த வருவாய் 2.39 லட்சம் கோடி ரூபாயாகவும், நிகர நஷடம் 2,525 கோடி ரூபாயாகவும் இருந்தது.

பகல் நேரங்களில் குறுகிய தூரங்களுக்கு ஏ.சி சேர் கார்களில் அமர்ந்து செல்ல இதுவரை 50 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு சில வழிதடங்களில், கட்டணங்கள் அதிகமாக உள்ளதால், இருக்கைகள் பாதியளவு கூட நிரம்புவதில்லை.

இதனால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்கவும், பயணிகளை ஈர்க்கவும், ஏ.சி சேர் கார் கட்டணங்களை 25 சதவீதம் வரை குறைக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

அடிப்படை கட்டணங்களுக்கு மட்டும் இது பொருந்தும்.

முன் பதிவு கட்டணம், அதி விரைவு வண்டிகளுக்கான சர்சார்ஜ், ஜி.எஸ்.டி கட்டணங்களுக்கு இது பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை கால சிறப்பு ரயில்கள் தவிர்த்து, வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து இதர ரயில்களிலும் இதை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த 30 நாட்களில், 50 சதவீதத்திற்கும் குறைவான ஏ.சி சேர் கார் இருக்கைகள் நிரம்பியுள்ள ரயில்களில் மட்டும் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இத்தகைய ரயில்களில், ஏ.சி சேர் கார்களுக்கான கட்டண குறைப்பு விகிதத்தை முடிவு செய்யும் அதிகாரம், சம்பந்தப்பட்ட ரயில்வே மண்டல அலுவலகங்களுக்கு அளிக்கப்பட உள்ளது.

விமானம் மற்றும் பேருந்து கட்டணங்கள் உள்ளிட்ட இதர வகையான போக்குவரத்து கட்டணங்களை ஒப்பிட்டு, அதன் அடிப்படையில் கட்டணக் குறைப்பு விகிதம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

வந்தே பாரத் ரயில்களின் நிறம், வெள்ளை மற்றும் ஊதாவில் இருந்து, ஆரஞ்ச் மற்றும் சாம்பல் நிறங்களுக்கு மாற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்