மனம் விட்டு பேச அழைத்த காதலன்.. காதலிக்கு துப்பட்டாவால் காத்திருந்த அதிர்ச்சி - தந்தைக்கு வந்த பகீர் மெசேஜ்

x

தெலங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டம், மானாஜிபேட்டையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி சாய் பிரியாவும், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீசைலன் என்ற இளைஞரும் 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். 3 மாதங்களுக்கு முன் தங்கள் காதலை பெற்றோரிடம் கூறி திருமணத்துக்கு ஒப்புதல் கேட்டார் சாய்பிரியா. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், காதலைக் கைவிடும்படி அறிவுறுத்தினர். அதன் பிறகு ஸ்ரீசைலனுடன் பேசுவதை தவிர்த்து வந்தார் சாய் பிரியா. கடந்த 5-ஆம் தேதி, சாய் பிரியாவை சந்தித்த ஸ்ரீசைலன், ஒரு முறை மனம் விட்டு பேசிவிட்டு நிரந்தரமாக பிரிந்துவிடலாம் என்று கூறி வெளியே அழைத்துள்ளார். அதை நம்பி அவருடன் பைக்கில் சென்ற சாய் பிரியா இரவு வீடு திரும்பவில்லை. பதற்றமடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடிய நிலையில் மறுநாள் காலை, மகளின் செல்போனில் இருந்து அவருடைய தந்தைக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், தான் தற்போது வேறொருவரை காதலிப்பதாகவும், அதற்கும் தந்தை எதிர்ப்பு தெரிவிக்க கூடும் என்பதால் காதலனைத் திருமணம் செய்ய ஹைதராபாத் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த தகவலில் சந்தேகம் இருப்பதாக கூறி, தேவருபள்ளி போலீசில் புகார் கொடுத்தார்கள் சாய்பிரியாவின் பெற்றோர். போலீசார் ஸ்ரீசைலனைப் பிடித்து விசாரித்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. தன்னைக் கைவிட்ட காதலியை கந்துரு கிராமம் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்ற ஸ்ரீசைலன், திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதனால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த ஸ்ரீசைலன், சாய்பிரியாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை போலீசில் கூறப்போவதாக மிரட்டிய சாய்பிரியாவை துப்பாட்டவால் கழுத்தை இறுக்கி கொலையும் செய்துள்ளார். தன் உறவினர் சிவா உதவியுடன் சடலாத்தை கால்வாயில் புதைத்து விட்டு, சந்தேகம் வராமல் இருக்க, சாய் பிரியாவின் செல்போனில் இருந்து தந்தைக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். நடந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, கால்வாயில் புதைத்த சடலத்தை போலீசார் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நம்பி வந்த காதலியை பாலியல் வன்கொடுமை செய்த ஸ்ரீசைலனும், அவருக்கு உடந்தையாக இருந்த சிவாவும் தற்போது கம்பி எண்ணுகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்