காதலன் 'கஞ்சா' மன்னன்... கணவன் ரவுடி..! குடும்ப விளக்கோ 'பவுடர் ராணி'... சிக்கிய 'கேடி' நயன்தாராவின் பரபர பின்னணி

x

கோலமாவு கோகிலா திரைப்பட பாணியில் கஞ்சா கடத்தல் கும்பலுக்கு உதவிய ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்... இதன் பின்னணி குறித்து விரிவாக விவரிக்கிறது இந்த தொகுப்பு...

ரியல் லைஃப் நயன்தாராவாக வாழ முடியாத விரக்தியில், ரீல் லைஃப் நயன்தாரா போன்றாவது வாழலாம் என நினைத்து கஞ்சா கடத்தலில் இறங்கியிருக்கிறார் ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர்...

பால் வடியும் முகமாய், அப்பாவி பெண்ணாக டிபன் பாக்ஸில் கஞ்சாவை பதுக்கி வைத்து கடத்தும் கேரக்டராக கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடித்திருப்பார் நயன்தாரா...

இதே பாணியில் நிஜத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது...

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சுடுகாட்டில் கஞ்சா மாத்திரைகள் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகள் மர்ம கும்பலால் கைமாற்றப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் சம்பவ இடத்ததை சுற்றி வளைத்த போலீசார், ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் 75 நைட்ரோவேட் மாத்திரைகளுடன் ஆட்டோவில் கைமாற்ற வந்த அஜய் என்பவரை மடக்கி பிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், திருமுல்லைவாயிலில் பதுங்கி இருந்த சூளைமேட்டை சேர்ந்த கஞ்சா வியாபாரி ராஜூவை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்...

விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ரீல் வெர்ஷனை மிஞ்சும் ரியல் வெர்ஷன் கதை ஒன்று போலீசாருக்கு கிடைத்துள்ளது...

பிரபல கஞ்சா வியாபாரி மற்றும் பல திருட்டு வழக்குகளில் சிக்கி சிறை சென்றுள்ள ராஜூவும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த சாந்தி பிரியாவும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்துள்ளனர்.

இதில், இருவருக்குள்ளும் திடீரென ப்ரேக்அப் ஏற்பட்டு பிரிந்த நிலையில், ஆந்திரா சென்ற சாந்தி பிரியா, சின்னி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

காதலன் தான் கஞ்சா கடத்தல் காரன், திருடன் என்றால் மீண்டும் மணம் முடித்த சின்னியும் ஒரு ரவுடி எனக் கூறப்படுகிறது...

அடிதடி வழக்கில் சிக்கிய சாந்திபிரியாவின் கணவன் சின்னியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்..

இந்நிலையில், சிறை சென்ற தனது கணவனை வெளியில் எடுக்க முன்னாள் காதலன் ராஜூவை தொடர்பு கொண்ட சாந்தி பிரியா பணம் கேட்டிருக்கிறார்.

இதை பயன்படுத்தி கொண்ட ராஜூ ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதற்கு, அவரை பயன்படுத்தி பணம் கொடுத்துள்ளார்.

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு ரயில் மூலமாக வரும் சாந்தி பிரியா, சாப்ட்வேர் இன்ஜினியாராகவும், ஐடி ஊழியர் போலவும் டிப்டாப்பாக உடை அணிந்து கஞ்சாவை கடத்தி கைமாற்றியது தெரியவந்துள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு முறையும் சுமார் 10 கிலோ கஞ்சாவை சாந்திபிரியா கடத்தி வருவார் எனவும், ஒவ்வொரு முறைக்கும் 40 ஆயிரம் ரூபாய் வரையில் பணம் சாந்தி பிரியாவுக்கு, கொடுக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது...

இந்நிலையில், ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் 75 நைட்ரோவேட் மாத்திரைகளை கைப்பற்றிய போலீசார், மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், கும்பலுக்கு நைட்ரோவேட் மாத்திரைகளை சப்ளை செய்த மீனம்பாக்கம் சத்யா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்