திருமணம் ஆன உடனே கடத்தப்பட்ட காதல் மனைவி.. கதறும் இளைஞர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பால்பண்ணை தெருவை சேர்ந்த சங்கர் முருகனும், அதேப்பகுதியைச் சேர்ந்த கோமதி என்பவரும் காதலித்து வ்ந்த நிலையில், இருவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தனது மனைவியை , அவரது பெற்றோர் வீடு புகுந்து கடத்திச் சென்றதாக சங்கர் முருகன் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story