18 வயதுக்கு கீழே காதல் திருமணமா..? டி.ஜி.பி. சைலேந்திர பாபு போட்ட அதிரடி உத்தரவு | DGP Sylendra babu

x

18 வயதுக்குட்பட்டவர்கள் திருமணம், காதல் விவகாரங்களில் சிக்கும்போது அவசரப்பட்டு போக்சோ வழக்கு பதியக் கூடாது என காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து டிஜிபி சைலேந்திர பாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் திருமணம், காதல் விவகாரங்களில் சிக்கும் போது போக்சோ வழக்களில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது.

அதற்கு பதிலாக குற்றவியல் நடைமுறை சட்டம் 41 பிரிவு 4ன் படி சம்மன் அனுப்பி எதிர் மனுதாரரை விசாரணை செய்யலாம்.

மேலும், போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், கைது செய்யப்படாத விவரம் வழக்கு கோப்பில் பதிவு செய்தும், அதற்கான காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

குற்றவாளியின் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிலை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் மட்டுமே கைது செய்யப்படவேண்டும்.

முக்கிய வழக்குகளில், இறுதி அறிக்கையினை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், மேல் நடவடிக்கை கைவிடும் வழக்குகளில் கோப்பினை தீவிர ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்கவேண்டும்.


Next Story

மேலும் செய்திகள்