கடல் கடந்த காதல்... கரம் பிடித்த தமிழக இளைஞர் - கடலூர் மருமகளான சீன பெண்
கடலூர் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரம் சேர்ந்த பாலச்சந்தர், சீனா மற்றும் பாங்காக்கில் தொழில் முனைவராக இருந்து வருகிறார். சீனாவை சேர்ந்த யீஜியோவுடன் சமூகவலைதளம் மூலம் நட்பு ஏற்பட்டு, பின்னர் காதல் மலர்ந்தது. இருவரும், தமிழ் முறைப்படி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதன்படி, மணமக்கள் பட்டு வேட்டி சட்டை, பட்டுப் புடவை மற்றும் தங்க அணிகலன்களை அணிந்தனர். யாக குண்டம் அமைத்து மந்திரங்கள் முழங்க, மங்கள இசையுடன் தாலி கட்டி திருமணம் இனிதே நடைபெற்றது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உற்சாகத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து பாலச்சந்தரின் சகோதரர் பாலமுருகனுக்கும் திருமணம் நடைபெற்றது.
Next Story