செல்போன் தொலைந்து விட்டதா? எப்படி கண்டுபிடிப்பது.? - மத்திய அரசு வெளியிட்ட புதிய இணையதளம்

x

திருடு போன செல்போனை கண்டுபிடிக்க, புதிய இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அதுகுறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

நீரின்றி அமையாது உலகு என்பது போல செல்போன் இல்லாமல் ஏது வாழ்க்கை? என, மனித வாழ்வில் ஒரு முக்கிய காதாபாத்திரமாக விளங்கி வருகிறது செல்போன்...

ஒருவரை தொடர்பு கொள்வது முதல் வங்கிக் கணக்கில் பணப்பரிவர்த்தனை செய்வது என பயன்படுத்துவரின் அனைத்து ரகசியங்களையும் உள்ளடக்கிய Confidential Diary-தான் செல்போன்...

ஒருவேளை இந்த செல்போன் காணாமல் போனாலோ? அல்லது திருடு போனாலோ? ஒட்டுமொத்தமாக இழந்த தனிப்பட்ட மனிதரின் தகவல்கள் அனைத்தையும், மீண்டும் புதுப்பிப்பது என்பது மிகுந்த சிரமம்...

ஆனால், தற்போதைய வரப்பிரசாதமாக, தொலைந்த செல்போனை, நாமே பிளாக் செய்து கண்டுபிடிக்கும் புதிய இணையதளத்தை வெளியிட்டு, செல்போன் வாசிகளுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது மத்திய அரசு.

அதாவது 'CEIR' என்ற இணையதளத்தில், தொலைந்த செல்போனை மீட்டெடுப்பதற்கான வழிவகை உண்டு என்கிறது மத்திய அரசு....

இதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், நமது செல்போனிற்கு தனித்துவமாக கொடுக்கப்பட்டிருக்கும் ஐஎம்இஐ எண்ணை வைத்து, தொலைந்து போன செல்போனின் இருப்பிடத்தை கண்டறிய முடியும் என்கிறது இந்த தொழில்நுட்பம்...

'CEIR' என்ற இணையதளத்தில், ஐஎம்இஐ எண்ணை பதிவு செய்து, அதனை வேறொருவர் பயன்படுத்தாத அளவிற்கு, பிளாக் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்