லாரி கடத்தல் வழக்கில் லஞ்சம்... போலீசார் 6 பேர் பணி நீக்கம் - அதிரடி உத்தரவு

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவருடைய லாரி கடந்த 2015 ஆம் ஆண்டு கடத்தப்பட்டதாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அணைக்கட்டு ஜார்தான்கொல்லை பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் என்பவர் லாரியை கடத்தியதாக நாட்றம்பள்ளி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது கடத்திய லாரியை உடைத்து விட்டதாகவும் அதற்கு உண்டான 12 லட்ச ரூபாய் பணத்தை செலுத்தி விடுவதாகவும் ராஜசேகர் காவல் நிலையத்தில் வைத்து கூறியதோடு முதல் தவணையாக 7 லட்சம ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அந்த பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் போலீசார் இருந்ததோடு மீதமுள்ள பணத்தையும் கேட்டுள்ளனர். இதுகுறித்து ராஜசேகரன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்த நிலையில்

சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் காமராஜ், உதவி ஆய்வாளர் சேகர் இருவரும் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கு நடந்து வரும் சூழலில் இதில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் உட்பட 6 பேரை பணி நீக்கம் செய்து வடக்கு மண்டல காவல்துறை தலைவர் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்