இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமி வன்கொடுமை-போக்சோ சட்டத்தின் கீழ் லாரி ஓட்டுநர் கைது
சுரண்டை பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், கருக்கலைப்பு செய்வதற்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு சென்ற நிலையில், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் கழுநீர்குளத்தை சேர்ந்த பெரியசாமி என்ற லாரி ஓட்டுநருடன் பழக்கம் ஏற்பட்டதும், ஆசை வார்த்தை கூறி வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த சுரண்டை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் பெரியசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story