"துயரத்தில் விளம்பரம் தேடுகிறார்""அண்ணாமலை போல் தலைவராகட்டும்"
விஷ சாராய உயிரிழப்பில் அரசியல் நடத்திட சில அரசியல் ஆத்திரக்காரர்கள் முற்பட்டுள்ள நிலையில் ஆளுநர் ரவியும் துயர சம்பவத்தில் விளம்பர வெளிச்சம் தேட முற்படுவதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விஷ சாராய உயிரிழப்பில் அரசிடம் ஆளுநர் அறிக்கை கேட்ட விதம் விஷமத்தின் வெளிப்பாடு என குறிப்பிடப்பட்டுள்ளது. நடந்தவை குறித்த விவரங்களை அரசின் மூத்த அதிகாரியிடமே ஆளுநரால் கேட்டு அறிந்து கொள்ள முடியும் நிலையில், அவ்வாறு செய்யாமல் அதை அறிக்கையாக வெளியிட்டு ஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் நூற்றுக்கணக்கானோர் விஷ சாராயம் குடித்து பலியான நிலையில், அங்குள்ள ஆளுநர்கள் பாஜக அரசிடம் விளக்கம் கேட்டு அறிக்கை வெளியிட்டார்களா எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் 2022ல் விஷ சாராயத்திற்கு 42 பேர் பலியானதாக வந்த செய்தியை ஆளுநர் நிச்சயம் அறிந்திருப்பார் எனவும், ஆளுநர் ரவி எப்போதும் சிறுபிள்ளைத்தனத்தோடு செயல்பட்டு கடும் விமர்சனத்திற்கு ஆளாவதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் விளம்பர வெளிச்சத்தில் இருக்க நினைத்தால் தனது பதவியை துறந்து அண்ணாமலை போல ஏதாவது ஒரு மாநிலத்தில் பாஜக தலைவராக ஆகிவிடலாம் என்றும் முரசொலி கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.