மேற்குவங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் - 3 உயிர்களை காவு வாங்கிய கொடூரம்
மேற்குவங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வன்முறைச் சம்பவங்களில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர்.
மேற்குவங்கத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ், பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டது. முர்ஷிதாபாத்தில் திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்த 52 வயது நபர் கொல்லப்பட்டார். புல்சாந்த் பகுதியில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ரெஜிநகர், துஃபன்கஞ்ச், கார்கிராம் பகுதிகளில் நடந்த மோதல் சம்பவங்களில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 தொண்டர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள மத்தியப் படை பாதுகாப்பு என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.