கடன் கொடுக்க இந்தியாவில் இவ்ளோ 'ஆப்'களா?.. செயலி மூலம் மட்டுமே கோடி கணக்கில் லோன்
- கடன் செயலிகள் மூலம் ஒரு லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- இந்தியாவில் ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் செயலிகள் எத்தனை உள்ளன என்றும், அவற்றின் மூலம் எவ்வளவு கடன் வழங்கப்பட்டுள்ளது என்று திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ ப்ரைன், மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
- அதற்கு, மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பக்வத் கரட், ரிசர்வ் வங்கி அளித்த தகவலின்படி இந்தியாவில் சுமார் 1,100 கடன் செயலிகள் இருப்பதாகவும் 2020-ஆம் ஆண்டில், வங்கிகள் மற்றும் வங்கிச் சேவை அல்லாத நிதி நிறுவனங்கள் மூலம், ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 821 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
Next Story