"பயந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது சிறுபிள்ளைத்தனமானது" - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும் என ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவது குறித்து மத்திய இணையமைச்சர் எல். முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி அலுவலகத்தில், நகராட்சியின் முன்னாள் சேர்மன் முனுசாமியின் உருவப்படத்தினை மத்திய இணையமைச்சர் எல். முருகன் திறந்து வைத்தார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவது தொடர்பாக கேள்வியெழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும், தவறு செய்தவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளத்தான் வேண்டுமெனவும் எனவும் தெரிவித்தார். அதற்காக பயந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது சிறுபிள்ளைத்தனமானது எனவும் எல்.முருகன் கூறினார். குமரி மாவட்டத்தில் நடைபெறும் பணிகளில், மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லை என குற்றச்சாட்டு நிலவிவருவதாகவும், மாநில அரசு சிறப்பு கவனம் செலுத்தி அதனை உடனடியாக தீர்க்க வேண்டுமெனவும் எனவும் எல். முருகன் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.