56 வயது முதியவருடன் லிவ் இன் உறவு.. பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பையில் கொண்டு வந்த பயங்கரம்

x

56 வயது முதியவருடன் லிவ் இன் உறவில் இருந்து 36 வயது பெண், துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சரஸ்வதி வைத்யா . 36 வயதான இவர் திருமணம் செய்து கொள்ளாத நிலையில், 56 வயது முதியவர் மனோஜ் சஹானி என்பவருடன் 3 வருடத்திற்கும் மேலாக லிவ் இன் உறவு முறையில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், முதியவரின் வீட்டினுள் இருந்து தூர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலோசார் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டினுள் இருந்து துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், சரஸ்வதி வைத்யா சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இருவரை கைது செய்துள்ள போலீசார், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்