2 மாதத்தில் சலித்த " லிவிங் டு கெதர்".. லாட்ஜில் காதலியை சிக்கவைத்த லவ்வர் -பெண்ணை கழற்றி விட பக்கா பிளான்- கடைசியில் நடந்த பயங்கர ட்விஸ்ட்

x

கேரள மாநிலம் இடுக்கியில் திருமண பந்தத்தை மீறி உறவில் இருந்த பெண்ணை கழட்டி விட முயன்ற நபர் தாமே போலீசாரிடம் சிக்கி கொண்டுள்ளார்.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள உப்புத்துறை கண்ணம்பாடி நகுதியை சேர்ந்தவர் ஜெயன். திருமணமான இவர், முகநூல் மூலம் அறிமுகமான திருமணமான பெண்ணுடன் நட்பு கொண்டு வந்துள்ளார். இருவரும் கடந்த 2 மாதங்களாக வீடு எடுத்து தங்கி வந்த நிலையில், அந்த பெண்ணை ஜெயன், ஒரு லாட்ஜ்க்கு, அழைத்து சென்று, 300 மில்லிகிராம் எம் டி எம் ஏ போதைப் பொருளை அவரது கைப்பையில் மறைத்து வைத்துள்ளார். பின்னர், கலால்த்துறை போலீசாருக்கு இந்த தகவலை கூறி விட்டு, ஜெயன் தலைமறைவானார். இதனிடையே கலால்துறையினர் நடத்திய சோதனையில், அந்த பெண்ணிற்கும் போதை பொருளுக்கும் தொடர்பு இல்லை என தெரிய வந்தது. தொலைப்பேசி எண்ணை வைத்து போலீசார் விசாரணை செய்த போது போன் செய்தவர், ஜெயன் என்பது தெரிய வந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், பெண் தோழியை கழட்டி விடுவதற்காக, போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்க வைக்க முயற்சித்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் ஜெயனை கைது செய்து சிறையில் அடைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்