கண்மாயில் குளித்த சிறுமி நீரில் மூழ்கி பலி...குழந்தையை மடியில் வைத்து கதறும் தாய் - நெஞ்சை உலுக்கும் காட்சி

x

மதுரை மதுரை நிலையூர் அருகே கண்மாயில் குளிக்க சென்ற 6 வயது சிறுமி நீரில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலையூர் ஓம் சக்தி நகர் பகுதியை சேர்ந்த சித்தன்- ஈஸ்வரி தம்பதியினரின் 6 வயது சிறுமி, அமுலு. இந்த சிறுமி விளையாடி கொண்டிருந்த போது, பானங்குளம் கண்மாயில் குளித்தார். அப்போது திடீரென சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற சிறுமிகள் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். குறைவான அளவே தண்ணீர் இருந்ததால் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் ஒன்று கூடி சிறுமியை மீட்டனர். ஆனால் சிறுமி அமுலு, பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த திருப்பரங்குன்றம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்