"பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து சாராயம் வருகிறது" - துணை முதல்வர் குற்றச்சாட்டு
பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.
பீகார் மாநிலம் சரோன் மாவட்டம் சாப்ராவில் 2 நாட்களுக்கு முன் கள்ளச்சாராயம் குடித்ததால் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
நாட்டையே இந்த சம்பவம் உலுக்கிய நிலையில், சரோன் மாவட்டத்தை ஒட்டிய அண்டை மாவட்டங்களான சிவான் மற்றும் பெகுசராய் எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களிலும், கள்ளச்சாரயம் குடித்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம், உயிரிழப்பு 65 ஆக அதிகரித்துள்ளது.
Next Story