புதிய அங்கீகாரத்தை பெற்ற லியோனல் மெஸ்ஸி

x

உலகின் சிறந்த விளையாட்டு வீரருக்கான லாரஸ் விருதை அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை தொடரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், பாரிஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விளையாட்டு உலகில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான லாரஸ் விருது மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதேபோல், உலகின் சிறந்த அணிக்கான லாரஸ் விருது அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு வழங்கப்பட்டு உள்ளது. சிறந்த விளையாட்டு வீராங்கனையாக ஜமைக்காவைச் சேர்ந்த தடகள வீராங்கனை ப்ரைஸும், சிறந்த வளர்ந்துவரும் வீரராக ஸ்பெயின் டென்னிஸ் வீரர் அல்கராஸும் தேர்வாகி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்