கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்த உயிர்..இளம் பெண்ணுக்கு எமனான 2 திருடர்கள்..ஒரு நொடியில் தலை கீழாக மாறிய குடும்பம்
சென்னை இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே ரயிலில் பயணம் செய்த பிரீத்தி என்ற பெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்றதால், ரயிலில் இருந்து தவறி விழுந்த ப்ரீத்தி சிகிச்சை பலனின்றி உயரிழந்தார். இந்த சம்பவத்தில், செல்போனை பறித்த மணிமாறன், விக்னேஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரித்த போது, இருவரும் குற்றத்தை ஒப்பு கொண்டனர். இதனிடையே, இந்த வழக்கை ரயில்வே போலீசார் விபத்து என வழக்கு பதிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனை மாற்றி, கொலை வழக்காக பதிவு செய்து உரிய தண்டனை பெற்று தர வேண்டும் என ப்ரீத்தியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின், ப்ரீத்தியின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் அளித்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
Next Story